10ம் வகுப்பு பொதுத்தேர்வு : சேலம் சிறைவாசிகள் 100% தேர்ச்சி

சேலம் மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 23 சிறைக்கைதிகளும் தேர்ச்சி அடைந்தனர்.

Update: 2024-05-10 08:38 GMT

சிறை கண்காணிப்பாளர் பாராட்டு 

சேலம் மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 23 சிறைக்கைதிகள் எழுதினர். இந்நிலையில் 23 பேரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறையாகும். தேர்ச்சி பெற்ற சிறைக் கைதிகளை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் பாராட்டினார்.

மேலும் சிறப்பாக செயல்பட்ட சிறைப்பள்ளி ஆசிரியர்கள் ராஜ்மோகன் குமார், சுரேஷ், ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு சிறைக் கண்காணிப்பாளர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மன இயல நிபுணர்  வைஷ்ணவி, நல அலுவலர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் சேலம் மத்திய சிறையில் தேர்வு எழுதிய கைதிகள் 100% தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News