11 வயது சிறுமி கொலை வழக்கில் நியாயம் கிடைக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

11 வயது சிறுமி கொலை வழக்கில் நியாயம் கிடைக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2024-08-23 13:44 GMT
11 வயது பள்ளி மாணவி தஸ்மிதா என்ற சிறுமி கொலை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் அரசு வேலை வழங்க வேண்டும் என சிபிஎம் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகையை 25 லட்சமாக வழங்க வேண்டும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை நடத்தி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி குமரமங்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெற்றது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு செலவில் சிகிச்சைக்கான முழு செலவு தொகை உட்பட 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.பாதிக்கபட்ட குடும்பத்திற்கு காவல்துறை உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ். தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன்.மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி. ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ்.மாவட்ட செயற்குழு உறுப்பினர். எஸ். தமிழ்மணி.. மாவட்ட குழு உறுப்பினர் கே.பழனியம்மாள். ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ்.வெங்கடாசலம். வீ.தேவராஜன். ஒன்றிய குழு உறுப்பினர்கள் . பி.மாரிமுத்து. ஈஸ்வரன்.ரமேஷ். சக்திவேல்.பூபதிமுருகன். மூத்த தோழர் சுந்தரம் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News