கம்பைநல்லூர் அருகே நூதன முறையில் 11 ஆடுகள் திருட்டு

கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி கிராமத்தில் நாய்களுக்கு குருணை மருந்து வைத்து சாகடித்து 11 ஆடுகள் திருட்டு போனது குறித்து போலீசார் விசரணை மேற்கொண்டனர்.;

Update: 2024-05-14 04:41 GMT

பைல் படம்


தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் அருகே உள்ள கெலவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வந்தார். இந்த ஆடுகள் மற்றும் மாடுகளுக்கு இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்க கொட்டகையில் நாய் ஒன்றும் வளர்த்து வந்தார்.நேற்று சங்கீதா கொட்டகைக்கு சென்றபோது அங்கு கட்டி வைத்திருந்த நாய் இறந்து கிடந்தது. மேலும் கொட்டகையில் இருந்த 4 ஆடுகள் திருட்டு போனது.

Advertisement

இதேபோன்று கம்பைநல்லூர் அருகே உள்ள ஒட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுராமன். விவசாயி. இவர் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று ரகுராமன் ஆட்டுப்பட்டிக்கு சென்றபோது அங்கு கட்டி வைத்திருந்த வளர்ப்பு நாய் இறந்து கிடந்தது. மேலும் 7 ஆடுகள் திருட்டு போனது. இந்த திருட்டு குறித்து அவர்கள் கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் நாய்களுக்கு குருணை மருந்து வைத்து சாகடித்து விட்டு ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News