சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 11 ஆண்டு சிறை

குளத்தூர் அருகே இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 11 ஆண்டுகால சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி செல்வி ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.;

Update: 2024-05-08 05:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மண்டையூர், சோதிரியன் காடு கிராமத்தைச் சேர்ந்த பாலமுத்து என்பவரின் மகன் நல்லதம்பி வயது 45 .இவர் கடந்த 6:3:2021 மதியம் 3மணி அளவில் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமியை அத்துமீறி அவருடைய வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்  இதை சிறுமியின் பாட்டி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து சத்தம் போட்டதால் ஊர் மக்கள் கதவை உடைத்து சிறுமியை மீட்டனர்.

Advertisement

இதையடுத்த அன்று இரவு 7:00 மணி அளவில் சிறுமியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் லதா நல்லதம்பி மீது வழக்கு பதிவு செய்து 7: 5:2021 மாலை 6 மணி அளவில் கைது செய்து போக்ஸோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று  தீர்ப்பு வழங்கப்பட்டது.  தீர்ப்பை வழங்கிய நீதிபதி செல்வி ஜெயந்தி குற்றச்சாட்டுக்கு உள்ளான நல்லதம்பி குற்றவாளி என அறிவித்தார்.   மேலும் நல்லதம்பிக்கு 11 ஆண்டுகால சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் மேலும் சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.  இதையடுத்து சிறை தண்டனை பெற்ற நல்லதம்பியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவலர்கள் அழைத்துச் சென்றனர்

Tags:    

Similar News