1.15 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை கலெக்டர் துவக்கி வைத்தார்

மரக்கன்றுகள் நடும் பணி

Update: 2024-08-15 17:48 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 1.15 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ்பச்சாவ் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 8.5 ஏக்கர் பரப்பளவில் 1.15 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ்பச்சாவ், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் த கே.என்.அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் (15.08.2024) பாடாலூரில் தொடங்கி வைத்தனர். மியாவாக்கி மரம் வளர்ப்பு முறை என்பது ஜப்பானில் வாழ்ந்த, யோகோஹாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தாவரவியலாளரான அகிரா மியாவாக்கி என்பவர் கண்டுபிடித்த முறையாகும். அதனால், இந்தமுறை மரம் வளர்ப்புக்கு ‘மியாவாக்கி’ என்று பெயிரிடப்பட்டுள்ளது. இடைவெளி இல்லா அடர்காடு என்ற தத்துவப்படி, ஆழமான குழி தோண்டி அதில் மக்கும் குப்பைகளைக் கொட்டி நெருக்கமான முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறைக்கு 'மியாவாக்கி' என்று பெயர். மியாவாக்கி முறையில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் நடப்படும். 1,000 சதுரஅடி நிலத்தில் 400 மரங்கள் என்ற அடிப்படையில் மரக்கன்றுகள் நடப்படும். மியாவாக்கி முறையால் பூமியில் வெப்பம் குறையும், காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும், பறவைகளுக்கு வாழிடம் உருவாகும், பல்லுயிர்ச் சூழல் மேம்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு சிறப்புவாய்ந்த “மியாவாக்கி“ முறையில் பெரம்பலூர் மாவட்டம். ஆலத்தூர் ஒன்றியம் பாடாலூரில் சுமார் 6.5 ஏக்கரிலும், வேப்பூர் ஒன்றியம் ஓலைப்பாடியில் சுமார் 2 ஏக்கரிலும் 1.15 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இதில் இன்று பாடாலூரில் சுமார் 1 லட்சம் மரக்கன்றுகன் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ்பச்சாவ் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், வேம்பு, புளி, மகிழம், நீர் மருது, நாவல், இலுப்பை, மகாகனி, செம்மரம், தேக்கு, கொய்யா, புங்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகள் வனத்துறையின் சார்பில் வழங்கப்பட்டது. மியாவாக்கி அடர்வனத்தை உருவாக்கும் பணியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன் முன்னெடுத்து செய்துள்ளார். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறையின் முழு ஒத்துழைப்போடு இந்த மியாவாக்கி அடர்வனக்காடுகள் உருவாக்கும் பணி நடைபெறுகின்றது.

Similar News