116 வது அண்ணா பிறந்தநாள் விழா

ஆரணி. 24 திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ. ம. மு. மு.க கட்சி சார்பில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கேளூர் சந்தை மேடு பகுதியில் நடைபெற்றது.

Update: 2024-09-24 11:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி அடுத்த கேளூர் சந்தை மேடு பகுதியில் அ. ம. மு. க. கட்சி சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி. வரதராஜன் தலைமையில் அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மற்றும் தேர்தல் பிரிவு மண்டல பொறுப்பாளர் என்.ஜி பார்த்திபன் போளூர் ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன் லட்சுமணன் ஆரணி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே புருஷோத்தமன் ஆரணி நகர செயலாளர் பன்னீர்செல்வம் களம்பூர் நகர செயலாளர் சந்தோஷ் குமார் வந்தவாசி நகர செயலாளர் சீனிவாசன் மாவட்ட மாணவரணி செயலாளர் நரேஷ் பாபு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் துரை வீராசாமி சரவணன் கதிரவன் மற்றும் ஊராட்சி ஒன்றிய நகர செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News