அரசு தொடக்கப் பள்ளியின் 118ஆவது ஆண்டு விழா
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் 118 வது ஆண்டு விழா நடைபெற்றது.;
மாணவிக்கு பரிசு வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியின் 118-வது ஆண்டு நேற்று நடைபெற்றது. விழாவில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் நயிமா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து நடந்த ஆண்டுவிழா பொதுக் கூட்டத்துக்கு பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் மாகீன் அபூபக்கர் தலைமை வகித்தார். கிராம கல்விக் குழு தலைவர் சுரேஷ்குமார், களியக்காவிளை பேரூராட்சி உறுப்பினர் ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ரெஜினி ஆண்டறிக்கை வாசித்தார்.
மேல்புறம் வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகரன், களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளர் பாபுராஜ், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ், மேல்புறம் வட்டார வளமையமேற்பார்வையாளர் ஷாஜி, பள்ளி முன்னாள் தலைமையாசிரியை எம். லிசம்மா பிலிப் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
களியக்காவிளை காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.நிகழ்ச்சியின் இடையே மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுருக்கு