சிட் பண்ட் நிறுவனத்தில் 66 பேரிடம் ரூ. 12 கோடி மோசடி

செய்யாறு ஏபிஆர் தீபாவளி சிட் பண்ட் நிறுவனத்தின் மீது 66 பேர் அளித்த புகாரின்படி ரூ.12 கோடி அளவிற்கு மோசடி நடந்துள்ளதாக பொளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன் தகவல் தெரிவித்தார்.

Update: 2024-01-24 07:45 GMT

போலீசார் சோதனை 

செய்யாறில் பிரபல ஏ பி ஆர் தீபாவளி சிட் பண்ட்ஸ் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர் செய்யாறு, திருவண்ணாமலை , விழுப்புரம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்ளிட்ட 25 இடங்களில் வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன் தலைமையிலான 8 குழுவினர் ஆய்வு மேற்கொண்டார்கள் வீடுகள், மளிகை கடை,நகை கடை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஏபிஆர் தீபாவளி சிட் பண்ட் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News