தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 12 பேர் போட்டி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 12 பேர் போட்டியிட உள்ள நிலையில் போட்டியிலிருந்து ஒருவர் விலகியுள்ளார்.

Update: 2024-03-31 14:56 GMT

மாவட்ட ஆட்சியர் 

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர். ஒருவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்தது.

ஆனால், 25 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை 31 பேர் 36 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.  இதையடுத்து 28 ஆம் தேதி வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது. அப்போது 23 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மீதமுள்ள 13 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான இறுதி நாளாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், சங்கர் என்ற சுயேட்சை வேட்பாளர் போட்டிலிருந்து விலகி தனது வேட்புமனுவை திரும்ப பெற்றார். 

இதையடுத்து 12 பேர் களத்தில் உள்ளனர். பின்னர் இவர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக வேட்பாளர் ச.முரசொலி உதய சூரியன் சின்னத்திலும், தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் கொட்டும் முரசு சின்னத்திலும், பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் தாமரை சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஏ.ஜெயபால் யானை சின்னத்திலும்,

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர் மைக் சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுயேச்சைகள் மேலும், 7 சுயேட்சை வேட்பாளர்களான அர்ஜூனுக்கு திராட்சை, எழிலரசனுக்கு சிறு உரலும் உலக்கையும், கரிகால சோழனுக்கு செயற்கை நீருற்று,

சந்தோஷுக்கு தர்பூசணி, சரவணனுக்கு மின்கல விளக்கு, செந்தில்குமாருக்கு கப்பல், ரெங்கசாமிக்கு பலாப்பழம் என அவர்கள் விரும்பிய சின்னங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News