நாமக்கல் தொகுதியில் 12 பேர் வேட்பு மனு தாக்கல் !

நாமக்கல் லோக்சபா தொகுதியில், நேற்று வரை 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-03-26 06:33 GMT

 வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதியில், வரும் ஏப்ரல் 19ல் தேர்தல் நடக்கிறது. அதையடுத்து, கடந்த, 20ல் வேட்புமனு தாக்கல் துவங்கியது. நேற்று திங்கட்கிழமை, ஒரே நாளில், 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தி.மு.க., கூட்டணியில், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன், அவருக்கு மாற்றாக, அதே கட்சியை சேர்ந்த நடராஜன், அ.தி.மு.க., வேட்பாளர் ராகா தமிழ்மணி, அவருக்கு மாற்றாக, யாழினி வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் டாக்டர் K.P.ராமலிங்கம், அவருக்கு மாற்றாக பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி, அவருக்கு மாற்றாக ரேவதி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராமன், விடுதலை களம் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி வேட்பாளர் மருத்துவர் எழில்செல்வன், சுயேச்சை வேட்பாளர் குருநாதன் என, ஒரே நாளில், 12 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடந்த, 20ல், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவன தலைவர் காந்தியவாதி ரமேஷ், 22ல், திருச்செங்கோடு கச்சேரி தெருவை சேர்ந்த செல்வராஜ் என, இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நாமக்கல் லோக்சபா தொகுதியில், இதுவரை, 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News