இலந்தைகுளம் கிராமத்தில் திமுக வில் ஐக்கியம்

வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் 120க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

Update: 2024-04-06 02:22 GMT

திமுகவில் ஐக்கியம்

தூத்துக்குடி கயத்தாறு தாலுகா  வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் ஆண்களும் பெண்களும் 120க்கும் மேற்பட்டோர், வடக்கு மாவட்ட செயலாளரும் மகளிர் உரிமை துறை மற்றும் சமூக நலன் துறை அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் வைத்து திமுகவில் இணைந்தனர்.  இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, கடம்பூர் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் நாகராஜா, ஒன்றிய செயலாளர்கள் சின்ன பாண்டியன், கருப்பசாமி, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அய்யாதுரை,மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் இணை அமைப்பாளர் ராஜதுரை, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News