திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகள் 120 பேர் அதிமுக ஐக்கியம்

சீர்காழியில் திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகள் 120 பேர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்

Update: 2024-01-30 11:34 GMT

அதிமுக வில் இணைந்த நிர்வாகிகள் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆயர்பாடி அரங்கில் அதிமுக நிர்வாகி மார்கோனி ஏற்பாட்டில் நகராட்சிக்கு உட்பட்ட 8 மற்றும் 9வது வார்டு பிற கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமையில் திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட பிற கட்சிகளை சேர்ந்த 120 பேர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர், கட்சியில் இணைந்த அனைவருக்கும் மாவட்ட செயலாளர் எஸ் .பவுன்ராஜ் கழகத் துண்டினை அணிவித்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரமோகன் ,ஒன்றிய செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News