திண்டுக்கல் நகரில் 120 டன் குப்பை அகற்றம்
ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டுக்கல் நகரில் 120 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-25 05:19 GMT
120 டன் குப்பை அகற்றம்
திண்டுக்கல் நகரில் சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை,யை முன்னிட்டு 120 டன் குப்பையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.திண்டுக்கல்லில் அக்.23,24ல் சரஸ்வதி பூஜை,ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகரின் பல இடங்களில் தேங்கி கிடந்த கழிவுகளை அகற்ற கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதுன்படி நகர்நல அலுவலர் செபாஸ்டின், சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி,செல்வராணி உள்ளிட்டோர் மாநகராட்சி 48 வார்டுகளிலும் குவிந்திருந்த 120 டன் கழிவுகளை 15 மினிவேன்,1 லாரி,3 டிராக்டர்கள் மூலம் அகற்றினர். மக்காத குப்பையை வேடப்பட்டி எரியூட்டு மையத்திற்கு எடுத்து சென்று அழித்தனர். மக்கும் குப்பை தரம்பிரித்து நுண் உர செயலாக்க மையத்திற்கு அனுப்பபட்டது.