13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

வருவாய் கிராம ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம்;

Update: 2025-02-05 13:29 GMT
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் D பிரிவில் இணைக்க வேண்டும், வாரிசு, கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் பி.குமார் தலைமை வகித்தார். போராட்டத்தில், வட்டத் தலைவர் எஸ்.மகேந்திரன், வட்டச் செயலாளர் என்.முத்துக்குமரன், வட்டப் பொருளாளர் கே.லோகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், மாவட்ட தலைவர் குமார் பேசுகையில். அடுத்த கட்டமாக வருகிற 27-ம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, கிராம உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.

Similar News