சேர்வலாறு அணை பகுதியில் 13 மி.மீ மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 13 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Update: 2024-04-17 04:51 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.17) காலை வரை மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 16 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று (ஏப்.17) காலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.