கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 1.14 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. Advertisement கமிட்டிக்கு, எள் 1,000 மூட்டை, மக்காச்சோளம் 1,000, கம்பு 30, சிவப்பு சோளம், உளுந்து தலா 10 மூட்டை, வேர்க்கடலை 5, ராகி 2, ஆமணக்கு ஒரு மூட்டை என மொத்தம் 2,058 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 8,949 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,257, கம்பு 2,351, சிவப்பு சோளம் 3,239, உளுந்து 4,649, வேர்க்கடலை 7,651, ராகி 3,039, ஆமணக்கு 4,650 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ஒரு கோடியே 14 லட்சத்து 4 ஆயிரத்து 243 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.