ஆவணம் இன்றி எடுத்து வந்தரு 1.4 லட்சம் பறிமுதல்
பறிமுதல்;
Update: 2024-03-27 07:35 GMT
தாசில்தாரிடம் ஒப்படை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சங்கராபுரம் அடுத்த எஸ்.குளத்துார் கூட்ரோடில் கருணாகரன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ., சந்தியாகு மற்றும் போலீசார் சுரேஷ், மூர்த்தி, சடகோபன் ஆகியோர் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். திருவெண்ணைநல்லுார் அடுத்த ஆனைவாரி கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் ராஜூ என்பவர் வியாபாரத்திற்கு பழம் வாங்க வாகனத்தில் பெங்களுரு செல்வதாக தெரிவித்தார். அவரிடம் ஆவணமின்றி இருந்த 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சங்கராபுரம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.