14 வயது சிறுமியுடன் பழக்கத்தால் போக்சோவில் கைது
நத்தம் பகுதியில் 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ள நபர் போக்சோவில் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 06:42 GMT
போக்சோவில் கைதான நபர்
தென்காசியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் (33) திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு நத்தம் கோவில்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நத்தம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த அவர் சிறுமிக்கு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்ததை தொடர்ந்து காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி ஜாகீர் உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.