இடைக்காட்டூரில் 145ம் ஆண்டு பாஸ்கு விழா

இடைக்காட்டூரில்நடந்த 145ம் ஆண்டு பாஸ்கு விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Update: 2024-04-08 04:02 GMT

பாஸ்கு விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் 145ம் ஆண்டு பாஸ்கு விழா நடைபெற்றது. டிஜிட்டல் முறையில் திரை அமைக்கபட்டு விழா நடைபெற்றது, இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் பாஸ்கு விழா நடைபெறும்,‌ இந்த ஆண்டு145வது விழாவில் சிவகங்கை - ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்த் பங்கேற்றார்.

பாஸ்கு விழாவை முன்னிட்டு தேவாலயத்தின் முன்பு உள்ள அலங்கரிக்ப்பட்ட அரங்கில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது. டிஜிட்டல் முறையில் ஸ்கிரின் அமைக்கபட்டு இதில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவர் சீடர்களுக்கு அருளாசி வழங்குதல், குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்தல், தொழு நோயாளிகளைக் குணமடையச் செய்தல், இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிதல், மீண்டும் அவர் உயிர் பெறுதல் உள்ளிட்ட பல காட்சிகள் நடித்துக் காட்டப்பட்டன. இந்த நாடகத்தில் நடித்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் விரதமிருந்து வந்து கலந்து கொண்டனர். மதுரை, மானாமதுரை, சிவகங்கை, விருதுநகர், காரைக்குடி உள்ளிட்ட இடங்களிலிருந்து பாஸ்கு விழாவை பார்க்க ஏராளமானவர்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News