அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தேசிய அளவில் 14-வது இடம்

லண்டன் குளோபல் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தேசிய அளவில் 14வது இடம் கிடைத்துள்ளது.

Update: 2024-05-25 06:20 GMT

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தேசிய அளவில் 14-வது இடம்

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு உலகளாவிய (குளோபல்) பல்கலைக்கழக தரவரிசை மூலம் தேசிய அளவில் 14-வது இடமும், உலகளாவிய அளவில் 1,103-வது இடமும் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டீன் செந்தில்குமார் கூறியதாவது, இன்றைய இணைக்கப்பட்ட உலகில் சமூகங்களை வடிவமைப்பதிலும் நிலையான வளர்ச்சியை நோக்கி மாணவர்களை முன்னேற்றுவதிலும் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை லண்டன் உலகளாவிய (குளோபல்) பல்கலைக்கழக தரவரிசையானது அடையாளப்படுத்தி அங்கீகரித்து வருகிறது.

அதன் அடிப்படையில் இந்தாண்டு நடத்தப்பட்ட தரவரிசை பட்டியலில் எங்கள் நிறுவனத்தின் பன்முகத்தன்மை சமத்துவம் மற்றும் பல்வேறு உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் மதிப்பீட்டில் தேசிய அளவில் 14-வது இடம் கிடைக்கப்பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகளாவிய அளவில் 1,103-வது இடமும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் அங்கீகாரம் கிடைப்பதற்கு கல்லூரியின் பல்வேறு செயல்பாடுகளில் சிறந்த பங்களிப்பு அளித்து வரும் டீன் செந்தில்குமாரை பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

Tags:    

Similar News