நாகையில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய 15 லட்சம் ஒதுக்கீடு
நாகை நகராட்சியில் 728 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய 15 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக நகர மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-06-29 07:37 GMT
.நாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகராட்சி கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் கூட்டுறையில் நடைபெற்றது கூட்டத்தில் நகர மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார் நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார் நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலவைத்தனர்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டுதங்கள் வார்டு பகுதியில் உள்ள நிறை, குறைகள், தேவைகள் - விவாதித்தனர் கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் இரா. மாரிமுத்து பேசுகையில் நாகை நகராட்சி பகுதியில் உள்ள தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது நகரப் பகுதியில் 728 நாய்கள் சுற்றி தருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது இதை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது இதன்படி நாய் ஒன்றுக்கு ரூபாய் 200 வீதம் அறுவை சிகிச்சை செலவு மற்றும் உணவு, தடுப்பூசி மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றிற்கு ரூபாய் 12 லட்சம் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் இதர செலவினங்கள் என மொத்தம் 15 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்