மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் படுகாயம் - டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருக நாகலாபுரம் கிராமத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 வயது சிறுவன் படுகாயம் அடைந்தார். டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்தார்.

Update: 2024-06-01 06:21 GMT

டிராக்டர் ஓட்டுநர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருக நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். வீட்டு கட்டுமானத்திற்காக தேவையான தண்ணீரை வாடகை டிராக்டர் மூலம் இறக்கிக் உள்ளார். அப்போது கணேசனின் 15 வயது மகன் டிராக்டரில் தண்ணீர் தீர்ந்து விட்டதா என டிராக்டர் மேல் ஏறி பார்க்கும் பொழுது தலைக்கு மேலே உயர்அழுத்த மின்சார கம்பி மோதி சிறுவன் தூக்கி வீசப்பட்டார். அதே நேரத்தில் டிராக்டரில் இருந்த ஓட்டுநர் முருகானந்தம் மீதும் மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர்இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஓட்டுநர் முருகானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News