108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.50 லட்சம் பேர் பயன்
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1.50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என 108 ஆம்புலன்ஸ் மேலாளர் தெரிவித்துள்ளார்.
108 ஆம்புலன்ஸ் மேலாளர் விமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கீரீன் ஹெல்த் சர்வீஸ் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை டெல்டா மாவட்டங்களில் பயனடைந்தவர்கள் வருமாறு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 36 வாகனங்களின் மூலம், இதய நோய் தொடர்பாக 3889, வாகன விபத்தில் காயமடைந்தோர் 11,481, மகப்பேறு தொடர்பாக 14,778, இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 28,910 என மொத்த பயனாளிகள் 59,058,
திருவாரூர் மாவட்டத்தில் 21 வாகனங்களின் மூலம், இதய நோய தொடர்பாக 2338 பயனாளிகளும், வாகன விபத்தில் காயம டைந்தோர் 5489 பேரும், மகப்பேறு தொடர்பாக 9554 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 17576 என மொத்த பயனாளிகள் 34957 ஆவர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 வாகனங்களின் மூலம், இதய நோய் தொடர்பாக 1854 பயனாளிகளும், வாகன விபத்தில் காயமடைந்தோர் 3627, மகப்பேறு தொடர்பாக 10900 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 14065 என மொத்த பயனாளிகள் 30446.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 15 வாகனங்களின் மூலம், இதயநோய் தொடர்பாக 1637 பயனாளிகளும், வாகன விபத்தில் காயமடைந்தோர் 4278, மகப்பேறு தொடர்பாக 8529 பயனாளிகளும் மற்றும் இதர மருத்துவ தேவைக்காக பயனடைந்தோர் 11379, மொத்த பயனாளிகள் 25823 ஆகும். ஒட்டு மொத்தத்தில் 4 மாவட்டங்களிலும் சேர்த்து கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் 1,50,284 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.