நத்தம் மாரியம்மன் கோயிலில் 15000 பக்தர்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலம்

நத்தம் மாரியம்மன் கோயிலில் 15000 பக்தர்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலம் சென்றனர்.

Update: 2024-02-14 09:37 GMT



நத்தம் மாரியம்மன் கோயிலில் 15000 பக்தர்கள் தீர்த்த குடத்துடன் ஊர்வலம் சென்றனர்.



திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் முக்கிய திருவிழாவான மாசிப் பெருந்திருவிழா திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகேயுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் சென்று நீராடி, மஞ்சள் உடையணிந்து புனித தீர்த்தக் குடங்களுடன் நத்தத்தில் சந்தன கருப்பு கோயிலில் வந்து ஒன்று சேர்ந்தனர்.

பின் புனிததீர்த்தக் குடங்களை தலையில் சுமந்து எடுத்து வந்து அங்கு கூடிய ஆயிரக்கணக்கான பக்தர்களை மேளதாளம் முழங்க, வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் சென்று மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News