152 பட்டு விவசாயிகளுக்கு ரூ.93.28 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்...
பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 152 பட்டு விவசாயிகளுக்கு ரூ.93.28 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்...;
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைக்கட்டிப்பாளையம், கூனவேலம்பட்டியில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 152 பட்டு விவசாயிகளுக்கு ரூ.93.28 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் 75 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். ------------------- நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணைக்கட்டிப்பாளையம், கூனவேலம்பட்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/ நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பட்டுவளர்ச்சித்துறை இயக்குநர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் ரூ.93.28 இலட்சம் மதிப்பீட்டில் 152 பட்டு விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்கள், பட்டுப்புழு வளர்ப்பு மனை மானியம், மல்பெரி நடவு செய்து பட்டுப்புழு வளர்ப்புமனை அமைத்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் 75 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பட்டுவளர்ச்சித்துறையின் சார்பில் மாநில திட்டத்தின் கீழ் 147 பட்டு விவசாயிகளுக்கு ரூ.74,92,500/- மதிப்பில் பவர்வீடர், விசைத் தெளிப்பான, மருந்து தெளிப்பான், உறிஞ்சு விசிறி, மின் வெப்பான், பட்டுக்கூடுகளுக்கான தூக்குப்பை உள்ளிட்ட பட்டுப்புழு வளர்ப்பு தளவாட பொருட்களையும், மத்திய பகுதி திட்டத்தின் கீழ் மல்பெரி நடவு மற்றும் புழு வளர்ப்பு மனை மேற்கொண்ட 5 பட்டு விவசாயிகளுக்கு ரூ.18,36,750/- மதிப்பில் மானியத்தினையும், நாமக்கல் மாவட்டத்தில் 10 அண்டுகளுக்கு மேல் பட்டு வளர்ப்பு மேற்கொள்ளும் 75 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) டாக்டர் வெ.சுபாஷ், அட்மா குழுத்தலைவர்கள் கே.பி.ஜெகநாதன் (இராசிபுரம்), ஆர்.எம்.துரைசாமி (வெண்ணந்தூர்), எம்.பி.கௌதம் (புதுத்துச்சத்திரம்), அட்மா குழு உறுப்பினர் டி.ஜெயபிரகாஷ் (புதுச்சதிரம்), இணை இயக்குநர், பட்டுவளர்ச்சித்துறை சேலம் இல.சந்திரசேகரன், விஞ்ஞானிகள்–பி மோ.சாரதா (ஆராய்ச்சி விரிவாக்க மையம் மத்திய பட்டுவாரியம் கோபிசெட்டிபாளையம்), செல்வி கே.சௌமியா (மத்திய பட்டு ஆராய்ச்சி (ம) பயிற்சி நிலையம், மைசூரு), உதவி இயக்குநர் (பொ) (பட்டுவளர்ச்சித்துறை) திருமதி க.நிஷாந்தி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.