கன்னியாகுமரி தொகுதியில் 15 .57 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு
கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 15,55,096 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,45,871, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,49,308, மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 64 என மொத்தம் 2,95,243 வாக்களர்களும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,30,590, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,34,664 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 என மொத்தம் 2,65,267 வாக்காளர்களும்,
குளச்சல் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,35,954 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,33,239 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 13 என மொத்தம் 2,69,206 வாக்காளர்களும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,21,146, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,20,398 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 23 என மொத்தம் 2,41,567 வாக்காளர்களும்,
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,17,694 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,19,685 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 என மொத்தம் 2,37,382. கிள்ளியூர் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,24,872, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,21,540 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 19 என மொத்தம் 2,46,431 வாக்காளர்களும் என மொத்தம் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,76,127 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 7,78,834 மூன்றாம் பாலினம் வாக்காளர்களின் எண்ணிக்கை 135 என மொத்தம் 15,55,096 வாக்காளர்கள் உள்ளார்கள். அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.