ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்

திருப்பூரில் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பதினாறு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-13 14:15 GMT

 திருப்பூர் மாநகரில் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு அரசின் தடை செய்யப்பட்ட பொருளான கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்து பின்னலாடை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் திருப்பூர் மாநகர காவல் துறைக்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனியாம் பூண்டி பகுதியில் காவல்துறையினர்  திடீர் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய திருப்பூர் மங்கலம் சாலை கோழிப் பண்ணையை சேர்ந்த கண்ணையன்  என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் பதுக்கி வைத்து இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார்  பறிமுதல் செய்தனர், தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கண்ணையன் திருப்பூரில் இருந்து ஒடிசா மாநிலம் சென்று ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் கடத்தி வந்து உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த தவம்,பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் ஆகியோர் மூலம் பின்னலாடை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் உசிலம்பட்டியை சேர்ந்த தவம்,பீகார் மாநிலத்தைச் சார்ந்த ராகுல் மற்றும் கண்ணையன் ஆகியோரை கைது செய்து திருப்பூர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News