17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி சாம்பல்

சமீபத்தில் அதே பகுதியில் 20 ஆடுகள் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது;

Update: 2025-04-26 16:31 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்தன ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தவசி இவர் தனக்கு சொந்தமான 217 செம்மறி ஆடுகளை மருவத்தூர் கிராமத்தில் சங்கர் என்பவரது காட்டில் பட்டி அமைத்து மேய்த்து வந்தார் 200 ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். மீதம் உள்ள 17 செம்மறி ஆட்டுக்குட்டிகளை பட்டியில் வைத்து மூடிவிட்டு சென்று உள்ளார். அப்போது சங்கர் காட்டின் அருகே உள்ள காட்டை சேர்ந்தவர் அவர் காட்டில் காய்ந்து போன சோள பயிர்களை தீ வைத்து எரித் துள்ளார் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தீ மளமளவென பரவி சங்கர் காட்டில் இருந்த பட்டியில் பரவியது இதில் பிறந்து 2 வார காலமே ஆன 17 செம்மறி ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி இறந்தன பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மருவத்தூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News