விழுப்புரம் பெட்டிக்கடையில் 19 கிலோ குட்கா
விழுப்புரம் அருகே பெட்டி கடையில் குட்கா பொருட்கள் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-03-15 13:53 GMT
விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ் முத்தாம்பாளையம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் தலைமையில் அப்பகுதியில் சென்று சோதனை மேற்கொண்டதில், முத்தம்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெரு சேர்ந்த தங்கராசு மகன் ஆனந்தகுமார்(28), என்பவரது பெட்டிக்கடையில்,ரூ.20,000 மதிப்புள்ள, 15 கிலோ எடை கொண்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.