வத்தலகுண்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் கொள்ளை

வத்தலகுண்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-18 08:55 GMT

கோப்பு படம் 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள திருநகரை சேர்ந்த வில்லியம் என்பவர் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று 19 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு மாடியில் உள்ள ஆதிஷ் என்பவர் வீட்டை உடைத்துள்ளனர்.

அங்கிருந்து ரூ.10 ஆயிரம் பணம், 3 வெள்ளி விளக்குகள், 30 வெள்ளி காசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News