சுரண்டை அருகே மினிலாரியில் குட்கா கடத்திய 2 போ் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மினிலாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2024-02-02 09:12 GMT


தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மினிலாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மினிலாரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சுரண்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சொரிமுத்து தலைமையிலான போலீஸாா் பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை காலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது காய்கறி ஏற்றி வந்த மினிலாரியை சோதனை செய்ததில், காய்கறிக்கு பதிலாக மளிகை பொருட்களை ஏற்றி வந்ததுள்ளனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான தகவலை தந்ததால் சந்தேகமடைந்த போலீஸாா், மினிலாரியின் உள்ளே சென்று பாா்த்தபோது, சரக்கு லாரியின் அடிப்பகுதியில் ரகசிய அறை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஸ்பேனா் உதவியுடன் அவற்றை திறந்து பாா்த்தபோது அங்கே ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், மினிலாரியின் ஓட்டுனரான பரங்குன்றாபுரத்தைச் சோ்ந்த காா்த்திக்(21), மினிலாரி உரிமையாளா் இளங்கோவன்(39) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

Tags:    

Similar News