கார் மீது பைக் மோதல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் காயம்

கன்னியாகுமரியில் கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் கார் மீது மோதியதில் வாலிபர்கள் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-03-30 03:21 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கல்படி சடையன் விளை பகுதியை சேர்ந்தவர் வினு (39). இவர் சம்பவத்தன்று தனது காரில் நாகர்கோவில் சென்று விட்டு, அம்மாண்டிவிளை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த மைக்கேல் பிராங்கிளின் மற்றும் அவர் நண்பர் ஜெகன் ஆகியோர் பைக்கில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் இருந்து மேற்கு கடற்கரை மெயின் சாலைக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில் திடீரென மாணவர்கள் வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்த மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News