2 திமுக எம்பி, 2 திமுக எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற 2 திமுக எம்பி, 2 திமுக எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.

Update: 2024-04-02 17:25 GMT

தஞ்சை நீதிமன்றம்

அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டங்களில் பங்கேற்ற 2 திமுக எம்பிக்கள், 2 திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 25 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர்.

இதைடுத்து கும்பகோணம் கிழக்கு, மேற்கு, தாலுகா காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட மூன்றாம் எண் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அ

ப்போது மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், தமிழக அரசின் தலைமை கொறடாவும், திருவிடைமருதூர் எம்எல்ஏவுமான கோவி.செழியன், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாநிலச் செயலாளர் குடந்தை தமிழினி உள்ளிட்ட 25 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 8 வழக்குகளையும் வருகிற 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News