+2 தேர்வு : விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 சதவீதம் தேர்ச்சி
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 93.17 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 2. 57 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது, அதன் படி விழுப்புரம் மாவட்டத்தில் 104 தேர்வு மையங்களில் 195 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 559 மாணவர்கள், 11ஆயிரத்து320 மாணவிகளும், 21 ஆயிரத்து 879 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 92244 மாணவர்களும், 10540 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 764 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், இதன் மூலம் 93.17 தேர்ச்சி விகிதம் அடைந்துள்ளனர், கடந்த ஆண்டை காட்டிலும் 2. 57 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது,
கடந்த ஆண்டு 90.66 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பழனி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களின் சீருடை, முடி திருத்தம் மற்றும் ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்படும் எனவும், பொது தேர்வில் முறைகேடுகளில் ஈடுப்பட்ட தனியார் பள்ளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.