+2 தேர்வு முடிவுகள் : நுங்கம்பாக்கம் பள்ளி 100 சதவீத தேர்ச்சி
நுங்கம்பாக்கம் பள்ளி பிளஸ் 2 பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.;
Update: 2024-05-07 01:54 GMT
பைல் படம்
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 35 பள்ளிகளில் இருந்து மொத்தம் 4998 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 4355 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 87.13 ஆகும். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.