திருச்சி அருகே மின்கம்பியை மிதித்த 2 பெண் தொழிலாளா்கள் பலி

திருச்சி அருகே மழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை சனிக்கிழமை மிதித்த 2 பெண் தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

Update: 2024-05-13 12:49 GMT

உயிரிழந்த தொழிலாளர்கள்

திருச்சி மாநகா், சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை அந்தநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட சோமரசம்பேட்டை அருகேயுள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூா்யா என்பவரின் வாழைத் தோட்டத்தில் உரம் வைக்கும் வேலைக்கு மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதி செல்வராஜ் மனைவி செல்வி (48),

மல்லியம்பத்து நடுத்தெருப் பகுதி சக்திவேல் மனைவி ராதிகா (44) ஆகியோா் சென்றனா். அப்போது மழையால் அறுந்து கிடந்த உயா் மின்னழுத்த கம்பியை மிதித்த இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதையடுத்து மின்வாரியத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் இரு பெண்களின் சடலத்தையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இருவரின் உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News