கேட்ப்பாரற்று கிடந்த பையில் 2 கிலோ கஞ்சா

சேலம் வழியாக கேரளா சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை ஆர்.பி.எப் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-20 05:55 GMT

கஞ்சா பறிமுதல் 

ஒடிசா, ஆந்திராவில் இருந்து சேலம் வழியே கேரளா செல்லும ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஆர்பிஎப் குற்றப்பிரிவு போலீசார், தமிழ்நாடு ரயில்வே போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தவகையில் நேற்று, ஆர்பிஎப் குற்றப்பிரிவு எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையில் ஏட்டுகள் கமலநாதன், பெரியசாமி மற்றும் சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சாலிமர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர்.

சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அந்த ரயிலில் ஏறி ஈரோடு வரை தொடர்ந்து சோதனையிட்டனர். அதில், முன்பக்கம் முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அதனை ஆர்பிஎப் வீரர்கள் கைப்பற்றி பரிசோதித்தனர். அதனுள் 31 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கடத்தி வந்த மர்மநபர், போலீசாரின் சோதனையை பார்த்ததும் கழிவறை பகுதியில் போட்டுவிட்டு தப்பியது தெரியவந்தது இதையடுத்து அந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News