பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் !
புதுக்கோட்டை லாரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சொல்லப்பட்ட 2 லட்சத்து 2600 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-26 04:51 GMT
புதுக்கோட்டை லாரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சொல்லப்பட்ட 2 லட்சத்து 2600 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் அலெக்ஸ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை மேற்கொண்ட போது அவ்வழியாக புதுக்கோட்டை அடுத்த வாகவாசல் கிராமத்தைச் சேர்ந்த கமல்ராஜ் என்பவர் இலுப்பூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி ஓட்டி சென்ற லாரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 2600 ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் அதனை வட்டாட்சியரியரிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த கமல்ராஜ்ஜிடன் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புதுக்கோட்டையில் செயல்படும் பிராய்லர் கோழி மற்றும் கறி விற்பனை கடையில் பணிபுரிவதாகவும் வியாபாரம் முடித்துவிட்டு பணத்தை எடுத்துச் சென்றதாகவும் உள்ளார்.