சேலத்தில் தொழிலாளி கொலையில் மேலும் 2 பேர் கைது

சேலத்தில் தொழிலாளி கொலையில் மேலும் 2 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.

Update: 2024-03-20 01:39 GMT

கைது 

சேலம் கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 46). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். பின்னர் அவர் தலையில் பலத்த காயத்துடன் அப்பகுதியில் மயங்கி கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அவரது மகன் அஜித்குமார், தந்தையை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார்.

இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிச்சிப்பாளையம் தேசிய புனரமைப்பு காலனி பகுதியை சேர்ந்த மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர் சின்ராஜ் (38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்கும், சேகருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து தள்ளிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சின்னராஜ் அவரை அடிக்கும் காட்சியும், அவருடன் சேர்ந்து மேலும் 2 பேர் சேகரை அடிக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சின்ராஜ், மோகன், ஜலால்புறா பகுதியை சேர்ந்த இம்ரான் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், சின்ராஜ் உள்பட 3 பேரும் அந்த பகுதியில் போடப்படும் காலி மதுபாட்டில்களை எடுத்து விற்பனை செய்து வந்த தகராறில் இவர்களுக்கும், சேகருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும், அதில் சேகரை அவர்கள் தாக்கியதில் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சின்ராஜ் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News