திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது!

திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-05-30 08:02 GMT

திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோடு  பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே சந்தேகப்படும்படி வந்த வாலிபரை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர குமார் (27) என்பதும்  இடுவம்பாளையம் பகுதியில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்டபோது  அதில் 2 கிலோ கஞ்சா இருந்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தர்மேந்திர குமாரை கைது செய்த தனிப்படை போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News