வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறித்த இரண்டு பேரை கைது செய்து தெற்கு காவல் நிலையம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-10 01:30 GMT

வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21).இவர் திருப்பூரில் தங்கி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் அகாடமியில் படித்து வருகிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் இரவு தேநீர் அருந்திவிட்டு ஈஸ்வரன் கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் பிரவீன் குமார் மற்றும் நண்பர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பிரவீன் குமார் கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

Advertisement

இதுகுறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஜெய்ஹிந்தபுரத்தை சேர்ந்த அஜ்மீர் (22) திருப்பூர் கள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் பாண்டி (19) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை மீட்டனர். இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News