கல்குவாரியில் டீசல் திருட முயன்ற 2 பேர் கைது
Update: 2023-12-27 06:48 GMT
கைது
வத்தலகுண்டு அருகே கல்குவாரியில் டீசல் திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கருப்பமூப்பன்பட்டி - பூவம்பட்டி இடையே உள்ள தனியார் கல்குவாரியில் பொக்லைன் மற்றும் லாரிகளில் டீசல் திருட முயன்ற தேனியை சேர்ந்த சின்னமணி(30), சித்திரவேல்(30) ஆகிய இரண்டு பேரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம், ரூ.500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வத்தலகுண்டு அருகே அந்தப் பகுதிகளில் சில நாட்களாக இரு சக்கர வாகனம், லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெட்ரோல், டீசல் திருடப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.