தென்தாமரை குளம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரை குளம் அருகே குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-05-26 13:22 GMT

குண்டர் சட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் அருகே உள்ள இலந்தயடிவிளையை சேர்ந்தவர் தனேஷ் (28) கூலித் தொழிலாளி. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி இவர் தனது நண்பர்கள் ரகுபாலன் (24), திவாகரன் (29) ஆகியோருடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் தனேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ரகுவரன், திவாகரன் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisement

இந்த நிலையில் இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ்.பி சுந்தரவர்த்தனம் கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் ரகுவரன், திவாகரன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News