குடும்பத் தகராறில் பெண் உட்பட 2பேர் தற்கொலை

தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் மதுபழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பெண் உட்பட 2பேர் தற்கொலை செய்து கொண்டனர். 

Update: 2024-03-21 01:30 GMT

தற்கொலை 

தூத்துக்குடி அருகில் உள்ள புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருககுமார் மகன் செந்தில்குமார் (40). இவர் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி முருகலட்சுமி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் மனம் உடைந்த செந்தில்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  மற்றொரு சம்பவம் தூத்துக்குடி பி அண்ட் டி காலனி மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி மல்லிகா (34). முருகேசன் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு மனம் உடைந்த மல்லிகா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News