தி.மலை: மின்கசிவு ஏற்பட்டு இரண்டு பேர் பலி!
செங்கம் அருகே மின் கசிவு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-04 14:47 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தில் நேற்று காலை சிவன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஒளி ஒலி அமைப்பாளரிடம் கூலிக்கு வேலை செய்த ஐயப்பன் (18), ஐயப்பன்(26) ஆகிய இருவரும் மின் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.