அடுத்தடுத்த சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே கைகலப்பில் ஈடுபட்டவர்களை துரத்தி சென்றபோது அடுத்தடுத்து நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2024-06-18 08:56 GMT

 தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் வடக்கு முஸ்லீம் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக் மகன் சிராஜுதீன் (19). இவரும், மாரியம்மன் கோவில் சாலிய தெருவைச் சேர்ந்த ராஜா மகன் வெங்கடேசன் (27), விஜய் (25) ஆகியோரும் அம்மாபேட்டை பகுதியிலுள்ள தோப்பில் மோட்டார் பம்ப்செட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கும், அங்கு குளிக்க வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சிலருக்கும் தகராறும், கைகலப்பும் ஏற்பட்டது.

Advertisement

இதையடுத்து, தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தங்களது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தனர்.  இவர்களை சிராஜுதீன், விஜய் ஒரு மோட்டார் சைக்கிளிலும், வெங்கடேசன் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் விரட்டிச் சென்றனர். மாரியம்மன் கோயில் அருகே சென்றபோது, சிராஜுதீன், விஜய் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்தனர்.

  இவர்களுக்கு பின்னால் வந்த வெங்கடேசனின் மோட்டார் சைக்கிளும் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இதனால், பலத்த காயமடைந்த சிராஜுதீன், வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விஜய் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News