சேலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு !
சேலத்தில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-05 06:18 GMT
சேலம் அம்மாப்பேட்டை குமரன் தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் ஜீவா (வயது 22). இவர், நேற்று முன்தினம் கிச்சிப்பாளையம் குறிஞ்சி நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் ஜீவாவை ஆபாசமாக பேசியதுடன் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பச்சப்பட்டி ஆறுமுக நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் (27), சதீஸ்குமார் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.