புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 16:18 GMT
சீல் வைக்கப்பட்ட கடை
அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் போலீசார் மற்றும் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யபடுகிறதா என சம்பவதன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கீழப்பழூவூரில் ராமதாஸ் என்பவரும், மேலப்பழூவூரில் ராஜேந்திரன் என்பவரும் தங்களது பெட்டிகடையில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கடையில் இருந்த 50 க்கும் மேற்பட்ட தடை செய்யபட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து இருவரது கடைக்கும் சீல் வைக்கபட்டது.
மேலும் கீழப்பழூவூர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.