நாகர்கோவிலில் விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

நாகர்கோவிலில் விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

Update: 2024-06-22 13:45 GMT
விபத்தில் இறந்த வாலிபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் அன்வர் சாதிக் மகன் ரியாஸ் கான் (24) இவர் நாகர்கோவிலில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தம்பத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் மகன்  டேனியல் (20 ) இவர் அந்த பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.      

இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இரவு இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். நாகர்கோவில் தபால் நிலையம் வழியாக வந்து, வடசேரி செல்லும் கேப் ரோட்டில் திரும்பிய போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது  மோதியது.

பின்னர் அந்த வாகனம் நிற்க்காமல் சென்று விட்டது.       இந்த விபத்தில் டேனியல், ரியாஸ்கான் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் ரியாஸ் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

டேனியலை  ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.        இது ஒரு நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி இரு  உடல்களையும்  பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம்  ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.    

  இந்த விபத்து குறைத்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை  சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News