வயதான தம்பதியிடம் நகை பறிக்க முயன்ற 2 இளம்பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தில் குறி சொல்வதாகக் கூறி வயதான தம்பதியிடம் நகை-பணம் பறிக்க முயன்ற 2 இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-12 11:09 GMT

காவல் நிலையம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே மேலரசூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் 70 வயதான தங்கவேல். இவரது மனைவி ஜோதி. இருவரும் வீட்டில் இருந்தபோது, இவர்களின் வீட்டிற்கு ஜோதிடம் பார்ப்பதற்காக திருச்சிமாவட் டம் தொட்டியம் தாலுகா அரங்கூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதான விஜயகாந்த்,18 வயதான பிரியதர்ஷினி,21 வயதான தெய்வானை ஆகிய 3 பேர் வந்துள்ளனர்.

பின்னர் குறி சொல்வதாக கூறிய விஜயகாந்த் தங்கவேல் மற்றும் அவரது மனைவியின் தலையில் எண்ணெய்யை தேய்த்து விட்டு பல்வேறு மந்திரங்கள் கூறியுள்ளனர். பின்னர் ஜோதி அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கலியை கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

நம்பிக்கையின் பேரில் கழற்றி கொடுத்துள்ளார்.பின்னர் நகையை எடுத்துக்கொண்டு 3 பேரும் தப்பி செல்ல முயன்றனர். இதில் சுதாரித்துக்கொண்ட தங்கவேல் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து 3 பேரை யும் பிடிக்க முயன்றார். ஆனால் விஜயகாந்த் மட்டும் தப்பி சென்றுவிட்டார். அவருடன் வந்த பிரியதர்ஷினி, தெய்வானை ஆகிய 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். இது குறித்து கல்லக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரியதர்ஷினி ,தெய்வானை இருவைரயும் மீட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கல்லக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து பிரியதர்ஷினி ,தெய்வானை இருவரையும் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ஜோதிடர் விஜய காந்தை வலைவீசி தேடி வரு கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News